இயக்குனர் சுந்தர் சி, அவ்னி மூவிஸ் நிறுவனம் அடுத்ததாக ‘மாயாபஜார்’ என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார். பத்ரி இப்படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், யோகி பாபு, அஸ்வின், வி.டி.வி.கணேஷ், ஆர்.என்.ஆர்.மனோகர், ஸ்ருதி மராத்தே, ரித்திகாசென், மாஸ்டர் சக்தி ஆகியோர் நடித்துள்ளார்கள். கடந்த மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்தி முடித்துள்ளனர். இப்படத்திற்கு ‘நான் ரொம்ப பிஸி’ என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகையன்று நேரடியாக சன் டி.வி.யில் ஒளிபரப்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.