எம்.ஏ.சி.சி.யில் இருந்து தப்பி சென்ற ஆல்வின் கோவிற்கு 3 நாட்கள் தடுப்புக் காவல்

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) தலைமையகத்திலிருந்து அக்., 11 ல் தப்பி ஓடிய ஒரு பெரிய பண மோசடி வழக்கின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆல்வின் கோ, 32 என அழைக்கப்படும் கோ லியோங் யோங், நேற்று அதிகாலை 1.20 மணியளவில் பகாங்கில் உள்ள ஒரு ரிசார்ட்டில், தனது காதலி என்று நம்பப்படும் ஒரு சீன நாட்டினருடன் கைது செய்யப்பட்ட பின்னர்,  செராஸ் போலீஸ் தலைமையக தடுப்புக் காவலில்  வைக்கப்பட்டுள்ளார்.

காமன் கேமிங் ஹவுஸ் சட்டம் 1953 இன் பிரிவு 4 (1) (சி) இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கோ, நாளை வரை தடுக்குக் காவலில் வைக்கப்படுவார்.

புக்கிட் அமான் சிஐடி இயக்குனர்  டத்தோ ஹுசிர் முகமது கூறுகையில், பண மோசடி, சீனாவில் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து மக்காவ் மோசடி, மற்றும் ஆன்லைன் சூதாட்டம் ஆகியவற்றில் கோவுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

அவர் MACC தலைமையகத்திலிருந்து எவ்வாறு தப்பித்தார் என்பதையும், அவருக்கு உதவி இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

எம்.ஏ.சி.சி தலைமையகத்திலிருந்து தப்பிச் சென்ற கோவை தேடும் பணி தொடங்கப்பட்டது. கடந்த வாரம், நகரத்தின் ஒரு வணிக வளாகத்தில் கோவின் அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here