கார் பள்ளதாக்கில் விழுந்து ஓட்டுநர் மரணம்

ஈப்போ: பீடோர் ஜாலான் சாங்காட் ஜாங் அருகே ஒரு கார் பள்ளத்தில் சறுக்கியதில் 29 வயது நபர் இறந்து கிடந்தார்.

திங்கட்கிழமை (நவ.2) காலை 10 மணியளவில் விபத்து குறித்த  அழைப்பு தங்களுக்கு வந்ததாக தாப்பா ஒ.சி.பி.டி  வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார். மரணமடைந்தவர் முகமது அஸ்மான் கான் மொஹமட் யூசோஃப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

எங்கள் ஆரம்ப விசாரணையில், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திற்குச் செல்வதற்கு முன்பு அவரது கார்  ஜாலான் பீடோர் – தெலுக் இந்தானில் இருந்து பீடோருக்கு சென்று கொண்டிருந்தது. விபத்தில் அந்நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

அவரது உடல் சவ பரிசோதனைக்காகா தாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here