முகக்கவசம் அசெளகரியமாம்!

உணவு ,  பானங்கள் தயாரிக்கும் போது முகமூடி அணிவதில் ஏற்பட்ட அசெளகரியமாக உள்ளது என்று சுல்தான் அப்துல் அஜீஸ் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள வர்த்தகர்கள் காவல்துறையினருக்கு அளித்த சாக்குப்போக்குகளில் ஒன்றாக இருக்கிறது.

இயக்க கட்டுப்பாட்டி ஆணையின் கீழ் தரமான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பொதுமக்கள் முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஈப்போ துணை போலீஸ் தலைவர் (செயல்பாடுகள்) சுப்ரிண்டெண்டண்ட் லீ ஸ்வீ சேக் தெரிவித்தார்.

கோவிட் -19 பரவுவதைத் தடுக்க வணிகச் சமூகம் உள்ளிட்ட பொது உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்பு மன்றம் வகுத்துள்ள நடைமுறைக்கு இணங்க வேண்டும் என்றார் அவர்.

வர்த்தகர்கள் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மாறவும், இந்த மாற்றங்களை அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு புதிய பழக்கமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர்  பாடாங்  போலோ என அழைக்கப்படும் பூங்காவில் இணக்க நடவடிக்கையை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கிந்தா மாவட்ட அதிகாரி மியோர் ஹெஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக் இதில் கலந்து கொண்டார்.

ஈப்போ நகராட்சி  கிந்தா மாவட்ட சுகாதார அலுவலகம் சம்பந்தப்பட்ட இந்த நடவடிக்கையில், பல்வேறு குற்றங்களுக்காக மூன்று அபராதங்கள் விதிக்கப்பட்டன என்று லீ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here