அமெரிக்காவின் 46- ஆவது அதிபர்-ஜோ பிடன் டிரம்ப் படுதோல்வி !!!

அமரிக்க அதிபருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஜனநயாகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், தன் தோல்வியை டிரம்ப் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை இதை எதிர்த்து கோர்ட்டுக்குச் செல்லுவதாக கூறி வருகிறார்.

இந்நிலையில், ஜோ பிடன் டிரம்புக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருவதால் விரைவில் ஓட்டு எண்ணிக்கை இழுபறி தீர்ந்து, அதிபர் என்ற முடிவைக் காண உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளது.

அமெரிக்கா தேர்தலில் தேர்தல் முறைகேடு, வாக்கு எண்ணிக்கை நிறுத்த வேண்டுமென டிரம்ப் தொடர்ச்சியாக டுவீட் பதிவுட்டு வருவதால் டுவிட்டர் நிறுவனம் இதுபோல் கருத்துகளைப் பதிவிட வேண்டாம் என டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுதியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here