
சிப்பாங்-
பொறியியலாளரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் ஒரு தொழிலதிபர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. சிப்பாங் கோத்தா வாரிசன் அருகே எரிந்த வாகனத்தில் பொறியாளரின் உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கோத்தா வாரிசான் அருகே தீக்கிரையாக்கப்பட்ட விளையாட்டு பயன்பாட்டு எஸ்யூவி வாகனத்தில் ஒரு மனிதனின் எரிந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அக்டோபர் 28 ஆம்நாள் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் விஜயன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் பிரதிநிதித்துவம் செய்யப்படாத நிலையில் துணை அரசு வக்கீல் நஷரினா நஸ்லான் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றம் பிப்ரவரி 8 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு குறிப்பிட்டிருக்கிறது .