வெளிநாட்டுத் தொழிலாளர்களின் இளஞ்சிவப்பு அணி பாதுபாப்பானதே!

கோலாலம்பூர்:

கட்டுமானத் தளத்தில் இளஞ்சிவப்பு தொற்று கையணி அடையாளத்தை அணிந்திருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருவரின் புகைப்படங்கள், கட்டுமானத் தளத்தில் கோவிட் -19 கண்காணிப்புத் திரையிடலுக்கு உட்பட்டவர்களாவர். இவர்கள் நேர்மறையான, நெருங்கிய தொடர்புகள் இல்லாதவர்கள் என்று சுகாதார தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கட்டுமான இடத்தை விட்டு வெளியேறுவதைத் தடுக்க இளஞ்சிவப்பு வளையல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அவர்கள்  கட்டுமானத் தளத்திற்குள் செல்ல முடியும். ஏனெனில் இது ஒரு கண்காணிப்புத் திரையிடலாகும், நெருங்கிய தொடர்புத் திரையிடல் அல்ல. திரையிடப்பட்ட அனைவருமே கட்டுமானத் தளப் பகுதிக்குள் இருப்பதை உறுதி செய்ய  மேம்பாட்டாளர் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

கட்டுமான இடத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பாதுகாப்புக் காவலர்களும், வங்சா மாஜு மாவட்ட காவல் தலைமையகத்தைச் சேர்ந்த போலீசாரும் தினமும் இப்பகுதியை கண்காணித்து வருகின்றனர் என்று அவர் நேற்று தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றிய பதிவில் தெரிவித்துள்ளார்.

அந்த இடத்தில் கிருமிநாசினி பணிகளை மேற்கொள்ளவும் மேம்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், முடிவுகளைப் பெறுவதற்காக நவம்பர் 13-15 முதல் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இளஞ்சிவப்பு அடையாளத்தை அகற்றுவது  2020 நவம்பர் 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு கட்டுமான இடத்தில் செய்யப்பட்டது.  ஸ்கிரீனிங் சோதனையில்  ஒரு நேர்மறையான வழக்கு மட்டுமே கண்டறியப்பட்டது. ஆனால் இந்த வழக்கு தளத்தில் இல்லை என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here