

அமெரிக்காவில் மேரிலாந்து மாகாணத்தில் அன்னாபொலிஸ் நகரில் டிரேஸ் லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் அமைப்பு செயல்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு அமைப்பான இந்த அமைப்பு உலகளவில் இந்தியா உள்ளிட்ட 194 நாடுகளில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தை மதிப்பிட்டு பட்டியலிட்டு வருகிறது.
இதில் இந்தியா 45 புள்ளிகளுடன் 77- ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 48 புள்ளிகளுடன் 78- ஆவது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு தரவுகள்படி, வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தென்சூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகியவை தொழில் ரீதியிலான லஞ்ச ஆபத்தை அதிகம் கொண்டுள்ளன. லஞ்சம் குறைவாக உள்ள நாடுகள் என்று பார்த்தால் அந்தப் பெருமை, டென்மார்க், நார்வே, சுவீடன், நியூசிலாந்து ஆகியவற்றுக்குக் கிடைத்துள்ளது.