சிம்பாங் அம்பாட் டோல் பிளாசா அருகே விபத்து – லோரி ஓட்டுநர் உயிரிழப்பு

(ரெ.மாலினி)

மலாக்கா:

சிம்பாங் அம்பாட் வடக்கு நோக்கிய டோல் பிளாசா அருகே இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற சாலை விபத்தில், 40 வயதுடைய லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

மாலை 4.04 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அலோர் காஜா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், ஆயேர் குரோ தீயணைப்பு நிலையத்தின் உதவியுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

   

சம்பவ இடத்துக்கு வந்தபோது, இசுசு 3 டன் லோரியில் ஓட்டுநர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு அவரை வெளியே எடுத்தனர்.

எனினும், மருத்துவக் குழுவினர் அவரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர். பின்னர் உயிரிழந்தவரின் உடல் மேலதிக விசாரணைக்காக மலேசிய அரச காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த மீட்புப் பணி மாலை 4.54 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மாலை 5.55 மணியளவில் நிறைவடைந்தது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here