பூட்டானில் சீனா ஆகிரமிப்பு! திருந்தாத ஜென்மங்கள்

டெல்லி: சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில் பூட்டானின் 2 கி.மீ. நிலப்பரப்பை ஆக்கிரமித்து ஒரு புதிய கிராமத்தையே சீனா உருவாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டானின் எல்லைகளை இந்திய ராணுவம் கேந்திர முக்கியத்துவம் கருதி பாதுகாத்து வருகிறது. ஆனாலும் பூட்டானில் எல்லைப் பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க சீனா நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. 

குறிப்பாக பூட்டானின் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்துவிட்டால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை தந்துவிட முடியும் என்பது சீனாவின் திட்டம். இதற்காக 2017-  இல் டோக்லாம் பகுதிக்குள் சீனா ஊடுருவியது. ஆனால் இந்திய ராணுவத்தினர் மிக கடுமையாக எதிர்த்து நின்று சீன ராணுவத்தைப் பின்வாங்க செய்தனர்.

பூட்டான் எல்லையில் இருநாடுகளிடையே உச்சகட்ட போர்பதற்றத்தை அப்போது ஏற்படுத்தியிருந்தது. இருந்தபோதும் வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் பூட்டான் நிலத்தை அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிப்பதில் சீனா இன்னும் திருந்தவே இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here