கொரோனா தாண்டவம்- தள்ளாடும் பிரேசில்

பிரேசிலில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 376 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு 11.69 லட்சத்தை நெருங்கியுள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பிரேசிலில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 32,622 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,52,786-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் புதிதாக 376 பேர் பலியாகினர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,68,989-ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் அதிகபட்சமாக ஸா பாலோ பகுதியில் 12,05,435 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 41,256 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here