ஆக்ஸ்போர்டு தடுப்பூசியில் 70% தடுப்பாற்றல் சக்தி-முடிவுகள் வெளியீடு

லண்டன்:

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து 70 சதவீத தடுப்பாற்றல் கொண்டதாக பரிசோதனை முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளன.

இந்த மருந்தில் சிறிய மாற்றங்களை செய்து முழுமைப்படுத்தும் பட்சத்தில் இதன் தடுப்பாற்றலை 90 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என்று தடுப்பூசி பரிசோதனைக் குழு தெரிவித்துள்ளது.

கொரோனா தீநுண்மிக்கு எதிராக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசி மருந்தை உருவாக்கி உள்ளது.

கொரோனா தீநுண்மிக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளில் அஸ்ட்ராஜெனகா மருந்து அதிக நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இந்த மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருந்தின் 3ஆம் கட்ட பரிசோதனையின் இடைக்கால முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகி உள்ளன. அதன்படி இந்த தடுப்பூசி மருந்து 70.4 சதவீத தடுப்பாற்றல் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் இரண்டு வெவ்வேறு அளவுகளில் தடுப்பூசி மருந்து செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில், ஒன்றில் 90 சதவீதமாகவும், மற்றொன்றில் 62 சதவீதமாகவும் தடுப்பூசியின் செயல்திறன் இருந்ததாக பரிசோதனைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வித்தியாசம் குறித்து பின்னர் ஆய்வு செய்யப்படும் என்றும் குழு தெரிவித்துள்ளது.

இது மற்ற தடுப்பூசி மருந்துகளைவிட விலை மலிவானதாகும். சேமித்து வைக்கவும் எளிதானது.

இந்த தடுப்பூசி மருந்து, பிரிட்டன்,  பிரேசில் நாட்டைச் சேர்ந்த 20 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்புகள் பல உயிர்களைக் காப்பாற்றும் ஒரு சிறந்த தடுப்பூசி நம்மிடம் இருப்பதைக் காட்டுகின்றன. வீரியமான மருந்து அளவுகளில் ஒன்று 90 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த அளவை பயன்படுத்தினால், திட்டமிட்டபடி தடுப்பூசி விநியோகம் செய்வதுடன் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடலாம்’ என்று ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மருந்து தயாரிப்புக் குழுவின் இயக்குநரும், தடுப்பூசி பரிசோதனைக் குழுவின் தலைமை ஆய்வாளருமான ஆண்ட்ரு பொலார்டு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here