விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை!

விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று  விழுப்புரத்தில் நடக்க உள்ளது.

மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள் என முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பனையூர் அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசித்த நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் விஜய்யின் தந்தை கட்சி ஒன்றை தொடங்கினார். இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் தனது பெயரையோ, படத்தையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து நடிகர் விஜய் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இரண்டு கட்டங்களாக ஆலோசனை மேற்கொண்டார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் நேரடி களம்காண மாட்டார் என்பது தெரிந்தாலும், அவரின் ஆதரவு எந்த கட்சிக்கு கிடைக்கும் என்பதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமெண்ட்: ஆடு பகை, குட்டி உறவு. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here