வீதியில் விற்கும் கடவுச்சொற்கள் – பீதியில் முடங்கும் பிரபலங்கள்!

முன்னணி நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளின் மின்னஞ்சல், கடவுச்சொற்களுடன் சந்தையில் விற்கப்படுகிறது என்றும், அதுவும் வெறும் 7 ஆயிரத்திற்கு விற்கப்படுகின்றது என்றும் வரும் தகவலால் உலகம் எங்கிலும் உள்ள முக்கிய பிரமுகர்கள் பீதி அடைந்துள்ளனர்.

எக்ஸ்ப்ளாய்ட்.இன் எனும் ரஷிய இணையதளத்தில் அந்த விற்பனை நடைபெறுகிறது என்றும் தெரியவந்துள்ளது. நிறுவனங்களின் மதிப்புக்கு ஏற்ப 7 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றும் தகவல்.

இணையங்களால் தொழிலில் வளர்ச்சி ஒரு புறம் இருக்கையில், இதுமாதிரியான இணைய திருடர்களால் வீழ்ச்சியும் இருக்கிறது.

இது குறித்து தொழில்நுட்பத்துறையின் அச்சுறுத்தல்கள் கண்டறியும் நிறுவனத்தின் மேலாளர் ரவீத் லயீப் கூறுகையில், ”அமெரிக்கா , ஐரோப்பியாவை சேர்ந்த இரண்டு முக்கிய நபர்களின் மின்னஞ்சல்,  கடவுச்சொற்கள் விற்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்களும் அது தங்களுடைய மின்னஞ்சல்தான், (பாஸ்வேர்டு)  கட்டவுசொற்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்’.

மேலும், ”பிடிபட்டவர்களிடம் இதுபோன்று 100க்கான முக்கியமானவர்களின் மின்னஞ்சலும் கடவுச்சொற்களும் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால், அவை எப்படி கிடைத்தன என்பதை தங்களுக்கு தெரியவில்லை என்று கூறிவிட்டனர். இது போன்ற சமூகவிரோதிகளால் இணைய வழி குற்றவாளிகள் கையில் இவை கிடைத்தால் என்னவாகும் என்று முன்னணி நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் அச்சத்தில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here