4000 பேரை வீட்டுக்கு அனுப்பத் திட்டம் – நட்டத்தில் வால்ட் டிஸ்னி!

கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மறுபுறம் பல நிறுவனங்கள் பணிநீக்கம் என்றும் ஆயுதத்தினை கையில் எடுத்து வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவின் பிரபலமான வால்ட் டிஸ்னி நிறுவனம், ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் 32,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இந்த நிறுவனம் உலகின் பல இடங்களிலும் பிரமாண்டமான தீம் பார்க்குகளை வைத்துள்ளது. இந்த தீம் பார்க்குகளில் பல ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, உலகின் பல நாடுகளும் லாக்டவுனை அமல்படுத்தியுள்ளன.

அதோடு சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், சுகாதாரத்தினை பின்பற்றவும் அறிவுறுத்தி வருகின்றன. இன்னும் சில நாடுகளில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் கையில் பணப்புழக்கம் குறைவால், அத்தியாவசியம் தவிர, மற்ற செலவுகளைக் குறைத்து வருகின்றனர்.

இதனால் கேளிக்கை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் பெரும்பாலும் முடக்கத்தில் தான் உள்ளன. ஏனெனில் இந்த நிறுவனங்களுக்கு முற்றிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நெருக்கடியான நிலையில் இருந்து மீண்டு வர இன்னும் சிறிது காலம் ஆகும்.

அதோடு மக்கள் கையில் பணப்புழக்கம் கொரோனாவுக்கு முன்பு போல் வரவும் இன்னும் சிறிது காலம் ஆகும். இதனால் வால்ட் டிஸ்னி போன்ற பொழுது போக்கு அம்சம் நிறைந்த நிறுவனங்கள், மீண்டு வரவும் சிறிது காலம் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான், ஏற்கனவே 32,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 4,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 28,000 பேரை பணி நீக்கம் செய்ய போவதாக இந்த நிறுவனம் அறிவித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here