ஜோகூர் தடுப்புக் காவலில் 255 மரணங்கள் என்பதில் உண்மை இல்லை- அயோப்கான் பிட்சை

ஜோகூர் பாரு:

ஜோகூர் மாநிலத்தில் 255 தடுப்புக்காவல் மரணங்கள் நடந்ததாக கூறப்படுவதை ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அயோப் கான் மைடின் பிட்சை மறுத்துள்ளார். இச் செய்தி சமீபத்தில் ஒரு பேஸ்புக் பதிவில் வெளியிடப்பட்டிருப்ப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

2000 முதல் 2014 வரையிலான புள்ளிவிவரங்களில் ஜொகூரில் தடுத்துவைக்கப்ட்ட கைதிகள் சம்பந்தப்பட்ட 23 இறப்புகள் மட்டுமே இருந்தன. அவர்களில் பெரும்பாலோர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அந்த வழக்குகள் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் ஒரு வீடியோ மூலம் இந்த குற்றச்சாட்டை கூறியவர், 38 வயதான என்.கணேஷ்பரன் என்பவர். உண்மையில் 2017 இல் ஒரு போலீஸ் அதிகாரியை மிரட்டியதற்காக மனித உரிமை ஆர்வலர் கே.ஹரிதாஸ் கைது செய்யப்பட்டதில் அவர் அதிருப்தி அடைந்துள்ளார் என்று அயோப் கான் கூறினார்.

விசாரணையில் சிரம்பானைச் சேர்ந்த கணேஷ்பரன்  ஏழு முந்தைய குற்றப்பதிவுகளை வைத்திருந்தார். இப்போது ஜெர்மனியில் இருக்கிறார் என்று அவர் கூறினார்.

அவர் 2010 முதல் 2017 வரை ஐந்து முறை கைது செய்யப்பட்டார். இந்த நபர் நவம்பர் 2, 2017 இல் மலேசியாவை விட்டு வெளியேறினார்.(கணேஷ்பரன்) தைரியமாக இருந்தால், அவர் மலேசியாவுக்கு திரும்பி வரலாமே என்றும்  அயோப் கான் கூறினார்.

அவர், கத்தார் நாட்டிலும் இருந்தார்.  இப்போது ஜெர்மனியில் இருக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம். 255 கைதிகள் தடுப்புக்காவலில் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல. அவருக்கு இந்த புள்ளிவிவரங்கள் எங்கிருந்து கிடைத்தன என்றும் தெரியவில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

ஹரிதாஸை காவல்துறையினர் தாக்கினர் என்ற கூற்றும் பொய்யானவை என்று அயோப் கான் கூறினார்.

தடுப்புக்காவலில் ஹரிதாஸ் அடிக்கப்படவில்லை. அவர், உலு சோ ரிமாண்ட் சிறையில் தடுத்து வைக்கப்பட்டபோது தாக்கப்பட்டதாக அறிக்கை அளித்திருந்தார். 2017 ஆம் ஆண்டில் முந்தைய குற்றத்திற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால் அவர் கைது செய்யப்படுவது கூட ஒரு பிரச்சினை அல்ல. அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணை ஆவணங்களில் உள்ளன.

கே.ஹரிதாஸின் கைது, பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாநில காவல்துறைத் தலைவர் மீது அதிருப்தி அடைந்த ‘கணேஷ் நடராஜா’ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய வீடியோ குறித்து அயோப் கானிடம் கேட்கப்பட்டது.

கணேஷ்பரன் சம்பந்தப்பட்ட முந்தைய பதிவுகளில் கொள்ளை, திருட்டு, குற்றவியல் மிரட்டல், தேசத் துரோகம் தொடர்பானவையும்  அடங்கும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here