தனியாக இருந்தவர் இறந்து கிடந்தார்!

செபெராங் பிறை, டிச 2-

தாமான் இம்பியானில் வட்டாரத்தில்  பூட்டிக்கிடந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டார் கொடுத்த தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர்  ஆடவர் ஒருவர் இறந்து கிடப்பதைக் கண்டனர்.

இறந்தவரின் சடலத்தை மீட்ட தீயணைப்புப் படையினர்  40 வயது மதிக்கதக்க ஆடவர் அவ்வீட்டில் தனியாக இருந்து  வந்ததாகக் கூறினர்.

சில தினங்களுக்கு முன்பே இவ்வாடவர் இறந்திருக்கக்கூடும் என தீயணைப்பு பாதுகாப்புப் பிரிவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இவ்வாடவரின் மரணம் குறித்து விசாரண செய்யப்படும் என்றும் கூறிய போலீசார் இரவு 12.19 மணியளவில் இறந்தவரின் உடலை பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here