காலத்திற்கேற்ப சாலை வரிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்!

 

கோலாலம்பூர்; டிச 2-
உலகளாவிய தானியங்கி வளர்ச்சிக்கு பொருந்தாத சாலை வரி கட்டண நிர்ணயம். வசதியுள்ளவர்கள் வாங்கிப் பயன்படுத்தும் சொகுசுக்கார்களுக்கான சாலை வரி கட்டணத்தைவிட  மிக அதிகமாகவே உள்ளது என்ற அதிருப்தி பரவலாகவே பேசப்படுகிறது.

மலேசியாவில், கார்களின் இயங்கு சக்திக்கும்  அதிகமாகவே கார்களின் சாலை வரி அதிகமாக இருக்கிறது.

உதாரணத்திற்கு, தனியார் வாகனங்களின் வரியும் அதன் பெட்ரோல் வகை இயந்திர சக்தி கொண்ட 1000 சிசி ரகத்திற்கும்  அதற்கு கீழ் உள்ள வாகனங்களுக்கும் வெறும் வெ. 20 மட்டுமே என்றிருக்கிறது.

மாறாக, 1600 சிசி ரகத்திற்கு 90 வௌ்ளியும், 1801 சிசிக்கு மேல் – 2000 சிசி ரகத்திற்கு  280 வெள்ளியும்  விதிக்கப்படுகிறது. 3000 சிசியும் அதற்கு மேல் உள்ள இயந்திர  சக்தி கொண்ட கார்களுக்கு 2130 வெள்ளி வரை கட்டணம் விதிக்கப்படுகிறது. .

3696 சிசி-யுடைய 370 ரக  நிஸான் ரக கார் உரிமையாளர் வருடத்திற்கு 5000 வெள்ளிக்கு மேல் சாலை வரி செலுத்துவதாகக் கூறுகிறார்.

தவிர, 6500 சிசி-யுடைய லம்போர்ஜினி, அவேன்தடோர் சொகுசுக்கார் உரிமையாளர் வருடத்திற்கு 18,000 வெள்ளி வரை கட்டணம் செலுத்துவதாகவும் தெரியவருகிறது. 

முன்பு, கூடுதல் இயந்திர சக்திகொண்ட வாகனங்களுக்கு சாலை வரி ஏற்புடையதாக இருந்தது. ஏனெனின், அக்காலத்தில் பிஎம்டபள்யூ ரக கார்களே அதிக இயந்திர சக்தி கொண்ட கார்களாக மதிக்கப்பட்டன. அக்கார்கள் ஏறக்குறைய 2000 சிசி-க்கும் மேற்பட்டதாக இருந்தன.

காலமாற்றதிற்கு ஏற்ப விலை உயர்ந்த சொகுசுக் கார்கள் கூட குறைந்த இயந்திர சக்தி கொண்ட கார்களாக இப்போது தயாரிக்கப்படுகின்றன. 

உலகெங்கும் இப்போது மின்சார கார்கள் மீது கவனம் திரும்பிவிட்டன.  இவ்வேளையில், சக்திமிக்க அதிக இயந்திர திறனைக்கொண்ட கார்கள் அடுத்த தலைமுறையினருக்கு அவசியமற்றதாகிவிட்டது என்பதும் உணரப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here