பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி நிறுவனர் ஆனைமுத்து மருத்துவமனையில் அனுமதி!

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் வே.ஆனைமுத்து உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரியாரியப் பெருந்தொண்டரும் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனருமானவர் வே.ஆனைமுத்து. இவருக்கு தற்போது 96 வயதாகிறது. 1964- ஆம் ஆண்டு பெரியாருடனான தனது பயணத்தை தொடங்கனார். பெரியார் இறப்பு வரை அவருடனேயே இருந்தவர்.

மண்டல்குழுப் பரிந்துரை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட மூளையாகவும் முதுகெலும்பாகவும் திகழ்ந்தவர். இவர் நடுவணரசில் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு பெற, முதன்முதல் கோரிக்கை வைத்தவர்.

இந்நிலையில் மார்க்சிய பெரியாரிய பொது உடைமை இயக்க தலைவர் வே.ஆனைமுத்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here