பணி செய்யாமல் ஆசிரியர்கள் ஊதியம் பெறுகின்றனரா?

கோப்புப் படம்

கோலாலம்பூர் (பெர்னாமா): இயக்கம் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் ஆசிரியர்கள் பணி செய்யாமல் ஊதியம் வாங்குகின்றனர் என்ற குற்றசாட்டு எழுந்திருப்பதால் அவர்களை முன்னணி பணியாளர்களை போன்ற பணிகளை வழங்குமாறு நெட்டிசன்கள் அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.

ஆனால் இதனை முற்றாக மறுத்த கல்வியாளர்கள் நாட்டில் 420,000  ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் என்றும் இந்தக் குற்றச்சாட்டு நிச்சயமாக ஆசிரியர்களின் உணர்வை புண்படுத்துகிறது என்கின்றனர்.

உண்மை என்னவென்றால், ஆசிரியர்கள் எதையும் செய்யாததால் ஊதியம்  பெறுவது போன்ற எதுவும் இல்லை. அதற்கு பதிலாக அவர்கள் வீட்டு கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.டி.ஆர்) அமர்வுகள் மூலம் கல்வி கற்பதற்கான தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதில் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here