சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாரத் பந்த்தின் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில் சில விமான சேவைகள் ரத்தாகியுள்ளன.

டெல்லியின் புராரி மைதானத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம், இன்று 13 ஆவது நாளாக தொடருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளிடம், மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாது போராடும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் வேளையில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

தமிழகத்திலும் பாரத் பந்த் நடைபெறுவதால், 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பாரத் பந்த்தின் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் விமானச்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே போதிய பயணிகள் இல்லாததால் சென்னை-மதுரை- சென்னை விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணி வரை ஒருவர் கூட முன்பதிவு செய்யாததால் சென்னை – அந்தமான் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here