ரத்தம் உறையும் குளிரிலும் போராட்டம்- வைரமுத்து

டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம் இன்று 13ஆவது நாளாக தொடர்ந்து வருவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ரத்தம் உறையும் குளிரிலும் சித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன, அதை நீளவிடக்கூடாது. இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே மத்திய அரசும் மனம் திறக்க வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார் அவர்.

டெல்லியின் புராரி மைதானத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கிய பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளின் போராட்டம் இன்று 13 ஆவது நாளாக தொடருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறவில்லை என்றால் ஓர் ஆண்டு ஆனாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

ரத்தம் உறையும் குளிரிலும்
சித்தம் உறையாத
விவசாயிகளின் போராட்டத்தைக்
கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன,
அதை நீளவிடக்கூடாது.
இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே மத்திய அரசும்
மனம் திறக்க வேண்டுமென்று
மக்கள் விரும்புகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here