கரோனா தடுப்பு மருந்து ரூ.250: சீரம் நிறுவனம் தகவல்

உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம், இந்தியாவில் 250 ரூபாய்க்கு கரோனா தடுப்பு மருந்து விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரோனா தொற்றுக்கு அவசர தடுப்பு மருந்தாக அஸ்ட்ராசென்கா மருந்தை பயன்படுத்துவதற்கான ஒப்புதலை சீரம் நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்நிறுவனம் இந்த தடுப்பு மருந்தை இந்தியாவில் விற்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய அரசிடம் மேற்கொண்டுள்ளது.

ஏற்கெனவே, தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா கூறும்போது, ஒரு டோஸ் அஸ்ட்ராசென்கா தடுப்பு மருந்து ரூ.1000 என்ற விலையில் விற்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்திய அரசு மிகப்பெரிய அளவில் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளதால் ஒரு டோஸ் தடுப்பு மருந்து ரூ.250-க்கு இந்திய சந்தையில் விற்கப்படலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் சீரம் நிறுவனம் பிற நாடுகளுக்கு முன்னதாகவே இந்த தடுப்பு மருந்தை இந்தியாவில் விநியோகிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here