நோலன் தனக்கு தானே செட் செய்துள்ள அளவுகோல் பெருசு, எனவே எதிர்பார்ப்பு மிக மிக அதிகம். அதனை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லவேண்டும். இப்படத்தில் பல கான்சப்ட்ஸ் உள்ளது. ஒரு நல்ல அனுபவம் வேண்டும் என படத்தை பார்த்தால் படம் பிடிக்கும், லாஜிக் பற்றி யோசிக்க ஆரம்பித்தால் படத்தின் மீதான ஈர்ப்பு குறைந்து விடும். இது ஒரு பீல் குட் படம். இப்படத்தில் நோலன் சொல்லிய விஷயங்களை விட சொல்லாமல் விட்ட விஷயங்களே அதிகம். அடுத்தடுத்த பார்ட்டுக்கு தேவையான பல பல விஷயங்களை இப்படத்தில் விட்டு வைத்துள்ளார்.
டைம் ட்ராவலில் புது ரகம், அதவது time inversion ! இதுவே மெயின் கான்செப்ட் 9.58 டு 10 மணி என முன்னோக்கி செல்வது இன்று நடப்பது. 10.02 இல் இருந்து 10 மணி என பின்னோக்கி வருவதே படத்தின் சாரம்சம்.
பொதுவாக மகன் கண்டுபிடிக்கும் டைம் மெஷின் வைத்து இறந்தகாலம் வந்து தாத்தாவை கொலை செய்தால், அப்பா பிறக்க மாட்டார், அப்போ மகனும் கிடையாது எனவே டைம் மெஷின் உருவாகாது, இது ஒரு வகை. மற்றோன்று (parallel universe) பாரலல் யூனிவெர்ஸ் உள்ளது என சொல்லி இது சாத்தியம், அங்கிருந்து வருவார்கள் என்பது வேற கான்செப்ட். ஆனால் வருங்காலத்தில் பூமி வாழ தகுதியை இழக்க, இறந்தகாலத்தில் உள்ளவர்களை அழிக்க திட்டம் போடுகிறார்கள், இதுவே நோலன் சொல்லும் கான்செப்ட்.
ஹீரோ சாவில் இருந்து தப்பித்து டென்ட் குழுவில் சேருகிறார். வருங்காலத்தில் இருந்து பொருட்கள் வருவதை அறிகிறார். பூமி அழிவதை, அதாவது மூன்றாவது உலகப்போரை தடுக்க முற்படுகிறார். ஹீரோவுக்கு உறுதுணையாக நீல் என்பவன் இணைகிறான். வில்லன் சாட்டோருக்கு ஏதிர்காலத்தில் இருந்து தங்கமும், என்ன செய்ய வேண்டும் என்ற குறிப்புகளும் வருகிறது.
வில்லனின் மனைவியின் நட்பை பெற்று வில்லனை சந்திக்க முற்படுகிறார் ஹீரோ. வில்லன் தேடும் பொருளை எடுத்து கொடுத்து அவனிடம் நட்பாக முடிவு எடுக்கிறார் ஹீரோ. ஆனால் அந்த பொருள் ஹீரோ வாயிலாக வில்லனிடம் கிடைக்க வைப்பதே டெனட் குழுமத்தின் திட்டம்.
பேரழிவை உருவாக்க அல்காரிதம் (algoritham) பூர்த்தி செய்ய ஒன்பது பாகங்களும் கிடைக்க அது ஒருபுறம் செல்கிறது. தனது கணவனுக்கு கான்சர் உள்ளது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு ஸ்விட்சை ட்ரிக்கர் செய்வான் என அவன் மனைவி டிப்ஸ் சொல்ல, திட்டம் தீட்டப்படுகிறது. அவனும் சாக உலகம் அழியுமாம்.
எனவே அவளை அந்த காலகட்ட நேரத்துக்கு அனுப்புகிறார்கள் டெனட் குழு. பேரழிவு நடக்கும் இடத்திற்கு இரண்டு குழுவாக பிரித்து ஒரு க்ரூப் முன்னோக்கி செல்ல, மற்றோரு குழு 10 நிமிடம் பின்னல் இருந்து வருகின்றனர். தரமான கிளைமாக்ஸ் காட்சியமைப்பு. ( இதுக்கு மட்டுமே நாம் கொடுத்த டிக்கெட் பணம் வசூல் ஆகிறது. புரியும் பட்சத்தில் !)
ஹீரோ மீது நம்பிக்கை வைத்து வில்லனை அவள் கொலை செய்து விட, அதே நேரத்தில் நீல் உதவ தப்பிக்கிறார் ஹீரோ. என்னடா என யோசிக்கும் சமயத்தில் எதிர்காலத்தில் ஹீரோ தான் டென்ட் என்ற அமைப்பை உருவாக்குகிறான் எனவும், நீல் வேலைக்கு எடுத்ததும் அவனே என்ற தகவல் வெளியாகிறது. வேறு ஒருவனிடம் சொல்லாமல் இறந்த காலத்தில் உள்ள தன்னிடமே, உலகை காக்கும் பொறுப்பை கொடுக்கிறார் ஹீரோ.
இது சத்தியமா ஒரு தடவை பார்த்துட்டு, நாங்க மேம்போக்கா சொல்லற கதை. அடுத்த தடவை பார்க்கும் சமயத்தில் வேற கோணத்தில் கூட புரிய வாய்ப்புள்ளது. அதுவே நோலனின் தந்திரம் என்றால் அது மிகையாகாது.