HIV நோயாளியை மீண்டும் மீண்டும் அறைந்த மருத்துவர் இடைநீக்கம்

புதுடெல்லி:

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு வைரல் வீடியோவில் எச்.ஐ.வி-பாசிட்டிவ் என்பதை வெளிப்படுத்தத் தவறியதற்காக நோயாளி ஒருவரை மருத்துவர் ஒருவர் அறைந்து திட்டுகின்ற சம்பவத்தை பார்த்த இந்தியாவில் உள்ள மருத்துவமனை ஒன்று அவரை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது.

சமூக ஊடக தளமான X இல் ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைக ளைக் கொண்ட ஒரு வீடியோவில் ஒரு மருத்துவர் ஒரு 45 வயது நபரை குறைந்தது மூன்று முறை அறைந்தார். அந்த மருத்துவர் டாக்டர் ஆகாஷ் கௌஷல் என்பவர் ஆவார்.

தலைநகர் புது டில்லிக்கு தெற்கே 800 கிமீ தொலைவில் உள்ள இந்தூர் நகரில் உள்ள அரசாங்கத்தால் நடத்தப்படும் மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் அந்த நபர் சாலை விபத்தின் போது ஏற்பட்ட கால் முறிவு மற்றும் பிற காயங்களுக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த நபரின் உறவினர்கள் தலையிட முயன்றபோது மருத்துவர் அவர்களைத் திட்டி யுள்ளார். எலும்பியல் பிரிவில் இருந்த டாக்டர் கவுஷல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது மேலும் இந்த பிரச்சினையை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்கிறது நிர்வாகம்.

இந்த சம்பவம் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியது, மேலும் எச்ஐவி-பாசிட்டிவ் நோயாளிகளை மருத்துவமனைகள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றிய விவாதத்தையும் ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here