கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியது என்ன ?

இந்த ஆண்டு, இணையத்தில் இந்தியர்கள் அதிகம் தேடிய விஷயங்களின் பட்டியலில், ஐபிஎல் முதலிடத்திலும் கொரோனா வைரஸ் இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. அமெரிக்க தேர்தல், பிகார் தேர்தல் முடிவுகளும் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டுள்ளன.

முன்னணி தேடியந்திரமான கூகுள் ஆண்டுதோறும் அதிகம் தேடப்படும் தகவல்களைப் பட்டியலிட்டு வருகிறது. இதே போல, 2020  ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தகவல்களின் பட்டியலையும் கூகுள் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், கொரோனா வைரஸ் முக்கிய இடம் பிடித்தாலும், இந்தியர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐபிஎல் முதலிடம் பிடித்துள்ளது. 

இந்தியர்களால் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தகவல்கள் பட்டியலில், அமெரிக்க தேர்தல், பிகார் தேர்தல், டில்லி தேர்தல் ஆகியவை முன்னிலை பெற்றுள்ளன. மேலும், அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன், பிரதமரின் விவசாயிகள் திட்டம் (பிஎம் கிஸான் ஸ்கீம்), சர்ச்சைக்குறிய தொலைக்காட்சி பத்திரிகையாளரான அர்னாப் கோஸ்வாமி ஆகிய தகவல்களும் முதல் பத்து இடங்களில் வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

ஜோ பிடன், அர்னாப் கோஸ்வாமி தவிர, பாலிவுட் நடிகை கனிகா கபூர், மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், அதிகம் தேடப்பட்ட பிரபலங்களாக உள்ளனர். பாலிவுட் நடிகைகள் கங்கனா ரனாவாத், ரியா சக்ர்வர்த்தி ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

வடகொரிய அதிபர் கிம் ஹாங் உன், அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் ஆகியோரும் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களாக உள்ளனர்.

இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட திரைப்படமாக தில் பேச்சாரா இருக்கிறது. நடிகர் சூரியாவின் சூரைப்போற்று திரைப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here