மே மாதம் வரை மழைக்காலம் நீடிக்கும்

தற்போதைய லா நினா காற்றழுத்தத்துடன் கூடிய மழை அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீடிக்கும்  என்று வானிலை கால, நில புவி இயற்பியல் நிறுவனம் (பி.எம்.கே.ஜி) எச்சரித்துள்ளது.

நாட்டின் வடமேற்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இப்பருவமழை வரும் மார்ச்சு மாதம் 2021 வரை நீடிக்கும்.  பல பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் காற்றழுத்தம் வடகிழக்கில் 10 முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். மேலும் கடுமையான மழை பாதிப்பை மலேசியாவின் கிழக்குப் பகுதியிலும் மேற்கு சரவாக், கிழக்கு சபா ஆகிய பகுதிகளிலும் எற்படுத்தும் . 

இம்மாத இறுதிவரை பெர்லிஸ், கெடா, உலு பேராக் பகுதிகளிலும் 100 முதல், 300 மில்லி மீட்டர் வரை  சராசரி மழைபெய்யும் .

இதுபோலவே கிளந்தான், திரெங்கானு, வடகிழக்கு பகாங் ஆகிய பகுதிகளில் 650 முதல் 1,100 மில்லி மீட்டர் மழை பெய்யும்.

வானிலை ஆய்வுக்  கழக அறிக்கையின் படி 2021 மே மாதம் வரை நாட்டின் பருவ நிலை பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இக்காலக்கட்டஙகளில் 100 முதல் 300 மீல்லி மீட்டர் வரை மழை பெய்யும். 

இதே காலக்கட்டத்தில் கரையோரப்பகுதிகளிலும் ஜோகூர் மாநிலத்தின் சில பகுதிகளில் 100 முதல் 300 மில்லி மீட்டர் அளவிலும்  மழை பெய்யக்கூடும்.

சரவாக் மாநிலத்தின் சில பகுதிகளில் 150 முதல் 250 மில்லி மீட்டர் அளவில் சராசரி மழையாகவும்   சபா, லாபுவான் பகுதிகளில் சராசரியாக 100 முதல் 350 மில்லி மீட்டர்வரை மழை பெய்யக்கூடும் என்று அறிக்கை கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here