பிரிட்டனில் பரவும் புதுவகை கொரோனா

லண்டன் :
பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளையொட்டி, வைரசின் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் வேகமாக பரவுவதால், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரசின் தாக்கம் அச்சுறுத்தி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் லண்டனில் கொரோனா வைரஸ் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பிரிட்டனில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து சுகாதாரத்துறை செயலர் மாட் ஹான்காக் கூறுகையில், லண்டன் , கென்ட், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு’ வல்லுனர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
இது பிரிட்டனின் பல்வேறு இடங்களில் தற்போதைய நிலையை விட வேகமாக பரவி வருகிறது.இது கொரோனா வைரசின் புதிய மாறுபாட்டால் ஏற்பட்டது. இந்த புதிய மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை கொடுக்கிறது. 7 நாட்களுக்கு ஒரு முறை சில பகுதிகளில், பாதிப்பு இரு மடங்காகிறது.

விரைவாகவும், தீர்க்கமானதாகவும் நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம். பிரிட்டனின் தெற்கில், இந்த மாறுபாட்டுடன் கூடிய கொரோனா வைரஸ் தாக்கியதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கண்டறிந்துள்ளோம்.

இது குறித்து உலக சுகாதார அமைப்பிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பிரிட்டன் விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் பப்கள், பார்கள், உணவகங்கள்  விருந்து நடக்கும் இடங்கள், தியேட்டர் உள்ளிட்ட பொழுது போக்கு பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.

கடைகள், பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பொது இடங்களில் 6 பேர் வரை சந்தித்து கொள்ளலாம். வெவ்வெறு வீடுகளில் உள்ளோர். ஒரே இடத்தில் கூடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here