ஈரோடு-
பிரபல கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் ஈரோடு காளைமாட்டு சிலை அருகில், தங்கபெருமாள் வீதியில் உள்ளது.
மேலும், சோதனை நடத்தப்படும் நிறுவனத்துக்கு சொந்தமாக பஸ் போக்குவரத்து, மசாலா பொருட்கள் உற்பத்தி நிறுவனம், கல்குவாரி, கட்டுமான பொருட்கள் தயாரிப்பு, திருமண மண்டபம் போன்ற பல்வேறு தொழில்களும் நடத்தப்படுகிறது. எனவே ஈரோடு, கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு போன்ற பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், உரிமையாளரின் வீடு உள்பட 15 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனை விடிய விடிய நடத்தப்பட்டது. நேற்று 2- ஆவது நாளாக வருமான வரி சோதனை நடந்தது. இந்தச் சோதனை நடத்தப்படும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த்அது. மேலும், வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சோதனையின்போது அனைத்து கோப்புகளையும் அதிகாரிகள் சரிபார்த்தனர்.
அப்போது கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தச் சோதனையில் சுமார் ரூ.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.