துபாய்-
அப்போது ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்த டாக்டர்கள் குழந்தையின் வயிற்றில் 8 காந்த மணிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். விளையாடும் போது அந்த மணிகளை குழந்தை விழுங்கி இருக்கலாம் என பெற்றோர் தெரிவித்தனர். காந்த மணிகள் குடலில் இருந்ததால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டு சீழ் வைத்திருந்தது.
இதையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதுபோன்ற காந்தமணிகள் குழந்தைகள் வயிற்றில் தங்கியிருந்தால் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் 3 அறுவை சிகிச்சைகளில் அந்த காந்த மணிகள் அகற்றப்பட்டு, குடல் பாதிப்பு சரி செய்யப்பட்டது.
குழந்தைகள் தனியாக விளையாடும்போது இதுபோன்ற ஆபத்தான பொருட்களைக் கைக்கெட்டும் இடத்தில் வைக்காமல் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஜோர்டான் தம்பதிக்கு டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.









