சித்ராவுக்கு வரதட்சணை கொடுமையா? கணவரிடம் விசாரணை!

டிவி நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவன் ஹேமந்த் ரவியிடம் கோட்டாட்சியர் இன்று காலை 11 மணியளவில் விசாரணை நடத்தவுள்ளார்.

கணவர் ஹேமந்த் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினாரா என்று கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணை நடத்துகிறார். ஏற்கனவே 6 நாட்களாக போலீஸ் விசாரித்த நிலையில் கோட்டாட்சியர் இன்று விசாரணை நடத்துகிறார்.

இதனால் பொன்னேரி சிறையில் இருந்த ஹேமந்த் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடக்கவுள்ளது. விசாரணைக்குப் பின்னர், ஹேமந்த் மீண்டும் பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்படுவார்.

முன்னதாக கடந்த 9 ஆம் தேதி பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நசரத்பேட்டை தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடன் நடிக்கும் நடிகர்களுடன் சந்தேகப்பட்டு அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கடந்த 14 ஆம் தேதி கணவர் ஹேமந்த் ரவியை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளைசிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here