நியூயார்க்-
அப்போது அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை தனது மனைவி மெக்கன்சிக்கு ஜெப் பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் அப்போதைய மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் கோடி ஆகும்.
தற்போது மெக்கன்சியின் சொத்து மதிப்பு 60.7 பில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. இதன் மூலம் அவர் உலகின் 18-ஆவது பணக்காரராகவும், உலக அளவில் பெண்களில் 3-ஆவது பணக்காரராகவும் விளங்குகிறார்.
தனது சொத்து மதிப்பு உயர்ந்து வரும் அதேநேரத்தில் அவர் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பதிலும் அவர் வள்ளலாகத் திகழ்கிறார்.
இந்நிலையில் அடுத்த 4 மாதங்களில் மீண்டும் 4 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.29 ஆயிரத்து 437 கோடி) 384 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தொற்றுநோயுடன் போராடும் அமெரிக்கர்களுக்கு உதவ விரும்பியதாகவும், அதற்காக இந்த நன்கொடைகளை வழங்கியதாகவும் மெக்கன்சி தெரிவித்துள்ளார்