ரஜினி – கமல் கூட்டணி வைத்தாலும் தமிழகத்தில் மாற்றம் ஏற்படாது: சீமான் கருத்து

ரஜினியும் கமல்ஹாசனும் கூட்டணி வைத்தாலும், தமிழகத்தில் மாற்றம் ஏற்படாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று, செய்தியா ளர்களிடம், ரஜினியும் கமல்ஹாசனும் கூட்டணி வைத்தாலும், தமிழகத்தில் ஒரு மாற்றமும் ஏற்படாது. இதனால், மற்ற கட்சிகளின் வாக்குகள் எதுவும் பிரியாது. மாற்றத்தை விரும்பிவரும் புதிய இளைய தலைமுறை வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கின்றனர் என்பதைத் தான் பார்க்க வேண்டும்.

எந்தக் கட்சியுடனும் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்காது. நாங்கள் ஏற்கெனவே வேட்பாளரை அறிவித்து வேலை செய்துவருகிறோம்.

மத்திய அரசு கொண்டுவந் துள்ள வேளாண் சட்டங்களில் ஒரு நன்மைகூட கிடையாது.இது சரியான சட்டம் என்றால், விவசாயிகள் எதற்காகப் போராட வேண்டும். மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது போலவே, விவசாயிகளின் போராட்டத்தையும் கண்டு கொள்ளவில்லை. இது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடிமக்களின் பிரச்சினை.

ஆங்கிலேயர்களின் நினைவிடத்தைக்கூட பராமரிக்கும் இந்த அரசு, ராஜராஜசோழனின் நினைவிடத்தைக் கண்டுகொள்வதில்லை. நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால், ராஜராஜசோழனுக்கு நினைவிடம் கட்டுவோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here