கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலய விசேஷ பூஜைகள்

மிகவும் பழைமை வாய்ந்த ஆலயமானதும் மலேசியாவின் வைணவ திருப்பதி என அழைக்கப்படும் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு விசேஷ அபிஷேகம் (திருமஞ்சனம்) நடைபெறும்.

அதனை தொடர்ந்து தனுர் மாத பூஜையும், காலை 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும் என்று ஆலயத்தலைவர் சங்கரத்னா சித.ஆனந்தகிருஷ்ணன் தெரிவித்தார். தொடர்ந்து விசேஷ பூஜைகளுடன் இரவு முழுவதும் ஆலயத்தில் பக்தர்கள் கண்விழித்திருந்து மறுநாள் 26.12.2020 சனிக்கிழமை துவாதசியை முன்னிட்டு  காலை 8 மணியளவில் மகேஸ்வர பூஜையுடன் வைகுண்ட ஏகாதசி நிறைவடையும்.

மேலும் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் தற்பொழுது சனிப்பெயர்ச்சி யாகம் கடந்த 16.11.2020 முதல் 26.12.2020 வரை நடைபெற்று வருகிறது.

வரும் 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் சனிப் பெயர்ச்சி மகா யாகமும் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெறும். பங்கேற்பாளர்கள் 30 வெள்ளி செலுத்தி அன்றைய தினமே ரசீது பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆலயத் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here