பீஜிங்-
பீஜிங்கில் உள்ள சீனோவாக் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனாவாக் என்ற கொரோனா தடுப்பூசியை கம்போடியாவில் பரிசோதிக்க அந்நாட்டு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உலகில் பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பில் மும்முரமாக உள்ளன. அவற்றில் பல தடுப்பூசிகள் வெவ்வேறு சோதனை கட்டங்களில் உள்ளன. இந்நிலையில் சீனாவின் சீனோவாக் பயோடெக் நிறுவனம் கண்டறிந்துள்ள கொரோனாவாக் தடுப்பூசியினை துருக்கி உள்ளிட்ட நாடுகளில் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கம்போடியாவிலும் பரிசோதனையை நடத்த திட்டமிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு பிரதமர் ஹன்சேன் , சீன கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்காக தங்கள் மக்களை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
கம்போடியா , சீனாவின் குப்பைத் தொட்டி அல்ல என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.’உலக அளவில் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா தடுப்பூசிகளில் சிறந்த ஒரே தடுப்பூசி தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’ இவ்வாறு கம்போடிய பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.