காதில் பூச்சி – இதுதான் பேச்சு

தாய்லாந்தில் Tha Rungkasatra (12) என்ற சிறுமி தனது வீட்டு படுக்கையில் தூங்கி, காலையில் எழுந்தார். அப்போது அவர் அறைக்குள் புகுந்த வண்டு அவளின் தலைமுடியில் இறங்கி வலது காதுக்குள் ஊர்ந்து சென்றது.

இதை உணர்ந்த அவள் பீதியில் கத்தினாள். அப்போது அவளின் 30 வயது தாய் ஜிந்தா அங்கு வந்த நிலைமையை உணர்ந்து காதுக்குள் புகுந்த வண்டை வெளியில் எடுக்க முயன்றார். ஆனால் காதுக்குள் இருந்து இரத்தம் வெளியான நிலையில் உடனடியாக மகளை மருத்துவமனைக்குக் கூட்டி சென்றார்.

மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் காதில் இருந்து வண்டு வெளியியேறிவிட்டதாக கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வீடு திரும்பிய பின்னரும் அச்சிறுமியின் காதில் அதிக வலி இருந்தது, இதனால் அடுத்த நாள் மீண்டும் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இரவு முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அடுத்தநாள் வெற்றிகரமாக வண்டு அவர் காதில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்ட போதிலும் அவர் காதில் வலி இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த சம்பவத்தால் நான் பெரும் அதிர்ச்சியில் உள்ளேன், பறக்கும் பூச்சிகள், வண்டுகளைப் பார்த்தாலே  பயமாகவும், பதட்டமாகவும் உள்ளது என  அவள் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here