ஆச்சர்யத்தின் உச்சம்! பைசா கோபுரத்தை விடவும் சாய்ந்திருக்கும் அதிசய ரத்னேஷ்வரர் கோவில்!

ரத்னேஷ்வர் மகாதேவ் கோவிலை மத்ரி-ரின் மகாதேவா அல்லது வாரணாசியின் சாய்வான கோவில் என்றும் அழைக்கின்றனர் இந்த கோவில் வாரணாசியில் மிக அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட தலங்களுள் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவின் உத்தரப்பிரதேச பகுதியில் இருக்கும் புனித நகரமான வாரணாசியில் இக்கோவில் அமைந்துள்ளது.

இந்து கோவில் அதிசயம் யாதெனில் இந்த கோவில் முறையாக பராமரிக்கப் பட்டபோதும் குறிப்பிட்ட அளவு பின்புறமாக அதாவது வடமேற்காக சாய்ந்திருக்கிறது. இதனுடைய கர்ப்பகிரகம் பெரும்பாலான நாட்களில் நீருக்கு அடியிலேயே மூழ்கி இருக்கிறது. கோடை காலத்தில் வெகு சில மாதங்கள் மட்டுமே இந்த கர்ப்ப கிரகத்திற்குள் நாம் சென்று வழிபட முடியும் . ஆனால் அது நிகழ்வது அரிதினும் அரிது.

இந்தக் கோவில் மிக அழகான பாரம்பரிய வடிவமைப்புடன் நாகரா அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் வடிவமைப்பு மற்ற கோவில்களைப் போல அல்லாமல் மிக வித்தியாசமானதாக இருக்கிறது. வாரணாசியில் அமைந்துள்ள மற்ற கோவில்களைப் போல் அல்லாமல் கங்கை நதிக்கரையில் இந்த கோவில் மிகவும் குறைந்த மட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் தண்ணீரின் அளவு சில சமயங்களில் கோவிலின் கோபுரத்தை கூட மூடி விடும் வகையில் உள்ளது. கர்ப்பகிரகம் நீண்ட நாட்கள் தண்ணீருக்குள் தான் இருக்கும் என்பதை அறிந்தே இப்படியான ஒரு வடிவமைப்பை உருவாக்கியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்த கோவில் குறித்து சொல்லப்படும் வரலாறு யாதெனில் இந்த கோவில், 500 ஆண்டுகளுக்கு முன்பே ராஜா மன் சிங் என்பவரின் பெயர் தெரியாத பணியாள் ஒருவர் அவருடைய தாயான ரத்னாபாய் அவர்களுக்கு கட்டியிருக்கிறார். இந்த கோவிலை கட்டி முடித்தபின் தன்னுடைய தாயாருக்கு கோவில் எழுப்பியதை மிகவும் பெருமையுடன் ஆணவத்துடன் அவர் பறைசாற்றி இ ருக்கிறார். ஒருவர் தாய்க்கு ஆற்ற வேண்டிய நன்றிக்கடனை ஒரு போதும் திரும்ப செலுத்த முடியாது என்பதால் இந்த கோவில் சாயத் துவங்கியதாக சொல்லப்படுகிறது .

ஜேம்ஸ் பிரின்செப் என்பவர் 18ஆம் நூற்றாண்டில் பெரும் ஓவியக் கலைஞர் ஆவார். இவர் 1820 முதல் 1830 வரை கோவில் தொடர்பான தொடர்ச்சியான ஓவியங்களை வரைந்துள்ளார். அதில் ரத்னேஸ்வரர் மகாதேவ் கோவிலும் முக்கியமான ஒன்று அவருடைய கருத்தின்படி கோவில் உன்னுடைய நுழைவாயில் நீருக்கு அடியில் இருப்பதால் மூலவருக்கு செய்யப்படவேண்டிய வழிபாடுகளை அர்ச்சகர் நீரில் நீந்தி சென்று செய்வார் என குறிப்பிட்டுள்ளார்.

விக்கி பீடியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here