புதுமண தம்பதியை பிரித்த கொரோனா

சென்னை கெளரிவாக்கம் பகுதியை சேர்ந்த முகமது ஷரிப் என்பவருக்கும், விருது நகரையடுத்த ஆர்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த நஜிமா பானு என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சியிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கொரோனோ பரவலை தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால், திட்டமிட்டப்படி மணமகன் திருமணம் நடைபெறாமல் இருந்தது.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், மணமகள் நஜிமா பானு வீட்டில் எளிய முறையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு, மணமகன் சென்னை கெளாிவாக்கத்திலிருந்து விருதுநகருக்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் அவரது ரத்த மாதிரியை எடுத்து கொரோனோ பரிசோதனைக்கு மருத்துவ குழுவினர் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், முகமது ஷரிப்பிற்கும், நஜிமா பானுவிற்கும் விருதுநகர் மாவட்டம், ஆர்.ஆர்.நகரில் எளிய முறையில் இன்று திருமணம் நடைபெற்று முடிந்தது.

திருமணம் முடிந்த சிறிது நேரத்தில், அம்மாபட்டி ஆரம்ப சுகாதார குழுவினர் மணமகள் இல்லத்திற்கு வந்து புதுமாப்பிள்ளையிடம் கொரோனா பற்றி எடுத்துக் கூறி, அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே மணமக்களை கொரோனா பிரித்துவிட்டதே என அப்பகுதி மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here