புதுடெல்லி:
விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா, மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் இன்று நடைபெறுகிறது.
விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகக் கலந்து கொண்டு காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் மேற்குவங்க ஆளுநர் மத்திய கல்வி அமைச்சர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் கடந்த 1921-ஆம் ஆண்டு குருதேவ் ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது. இது நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.








