அமீரக பொருளாதார அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த இந்த பிரசாரம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய சுற்றுலா பிரசாரமானது தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தை ஒரே சுற்றுலா மையமாக ஒருங்கிணைத்து பல்வேறு முக்கிய பகுதிகளை பிரபலப்படுத்தி அதன் மூலம் அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது நோக்க்கமாக உள்ளது.
இந்த புதிய சுற்றுலா பிரசாரத்திற்காக அமீரக அரசு சார்பில் 4 ஆயிரத்து 100 கோடி திர்ஹாம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு சுற்றுலா மட்டுமல்லாமல் அதனை சார்ந்துள்ள சிறு வர்த்தகங்களுக்கு வாய்ப்பளித்து அவர்களது வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த பிரசாரமானது செயல்படுத்தப்பட உள்ளது.
அதில் அமீரகத்தில் உள்ள அழகிய கடற்கரைகள், கோட்டைகள், நீரோடைகள், பாலைவன பகுதிகள் மற்றும் சூரிய வெளிச்சத்தில் அந்த பகுதிகள் ஒளிரும் வகையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.