காரில் சென்ற நபருக்கு ஏற்பட்ட மாரடைப்பு – மனிதாபிமானம் இல்லாத வழிப்போக்கர்கள்

இலங்கையில் படல்கும்புர – எல்ல பிரதேசத்தில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட பொறியியலாளர் ஒருவரிடம் இருந்து 81 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இவரின் மனைவி மெதகம பிரதேசத்தில் மருத்துவராகப் பணியாற்றுகின்றார். இவர் புத்தல பிரதேசத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்றபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது வாகனத்தை அருகில் நிறுத்தி விட்டு பொறியியலாளர் உதவி கோரியுள்ள நிலையில் லாரி ஒன்றில் சென்ற மூன்றுபேர் அவரிடம் பேச முயற்சித்துள்ளனர்.

இதில் அவரால் பேச முடியாமல் போன சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்ட நபரின் பையில் இருந்து 81 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here