புதுடெல்லி:
இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்தார். அப்போது இதுவரை எந்த வெற்றியும் அடையவில்லை. ராணுவ மட்டத்தில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் நடைபெறும். எந்த முன்னேற்றமும் இல்லாத தற்போதைய நிலை ஆக்கப்பூர்வமானதாக இல்லை. இதே நிலை நீடித்தால் படைகளை குறைக்க முடியாது என்றார்.