ஏதென்ஸ்-
உலக நாடுகளைப் புரட்டி எடுத்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கிரீஸ் நாட்டில் கொரோனாவுக்கு எதிரான பைசர் தடுப்பூசி அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்த நிலையில், நேற்று அங்குள்ள ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் ஒருவருக்கு லேசான அலர்ஜி உண்டானது.
ஆனால் சிகிச்சைக்குப் பின் அது சரி செய்யப்பட்டதாக த்தெரிவிக்கப்பட்டுள்ளது.