வாஷிங்டன்-
ஆனால், அதை மீறியும் இந்தியா கடந்த ஆண்டு ‘எஸ்400’ ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க முதற்கட்டமாக 800 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.5,843 கோடி) ரஷியாவிடம் வழங்கியது.
இந்தநிலையில் ரஷியாவிடம் ‘எஸ்400’ ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்கும் விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படலாம் என அமெரிக்க நாடாளுமன்றம் எச்சரித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சி பிரிவான நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அதில் ‘‘இந்தியா அதிக தொழில்நுட்ப பகிர்வு, இணை உற்பத்தி முயற்சிகளுக்கு ஆர்வமாக உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் அதிக சீர்திருத்தங்கள் , அதன் பாதுகாப்பு துறையில் அதிக அந்நிய நேரடி முதலீட்டு இடைவெளிகளை அமெரிக்கா வலியுறுத்துகிறது.