வாஷிங்டன்-
இதனை பின்பற்றி அமெரிக்காவும் தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக் டாக், வீ சாட் ஆகிய சீன செயல்களுக்குத் தடை விதித்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் 8 சீன செயலிகளுக்குத் தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த செயலிகள் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி சீன அரசுக்கு வழங்குவதாக அந்த தடை உத்தரவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவில்
நமது நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்க வேண்டுமெனில் சீன தொடர்புடைய மென்பொருள் செயலிகளை உருவாக்குபவர்கள் அல்லது கட்டுப்படுத்துபவர்களுக்கு எதிராக நாம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, அலிபே, கேம்ஸ்கேனர், கியூ கியூ வாலட், ஷேர் இட், டென்சென்ட் கியூ கியூ, விமேட், வீ சாட் பே, டபிள்யூ.பி.எஸ் அலுவலகம் ஆகிய 8 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கபபடுகிறது. இத்தடை உத்தரவு அடுத்த 45 நாட்களில் நடைமுறைக்கு வரும்.