இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பாதிக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு மன அழுத்தமா?

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவத்தில் சண்டையிட்டு, பயங்கரவாதிகளால் உயிரிழக்கும் வீரர்கள் ஒரு புறம் இருந்தாலும் தற்கொலை செய்து கொண்டு இறப்பது அதிகம் இருக்கிறது. இதற்குக் காரணம் மன அழுத்தம் தான் என்று கூறப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 100 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்றும், 2010 முதல் 950 க்கும் மேற்பட்ட வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூஷன் ஆப் இந்தியாவுக்கு சேவை செய்யும் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில் 13 லட்சம் பேர் பணியாற்றும் இந்திய இராணுவத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்நிறுவனம் 400 பேரிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

ஆனால், இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர். ஆய்வு சரியான முறையில் எடுக்கப்பட்டிருக்காது என அவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here