தமிழென ஊட்டும் பொங்கல்

இனிப்பான பொங்கல் வைத்து தைப்பொங்கலையும் தமிழ்ப் புத்தாண்டையும் இனிதே வரவேற்கும் காஜாங் தமிழ்ப்பள்ளிக்கூட ஆசிரியர்கள் மு. கலைவாணி, மு. கண்மணி, ப. கோகிலா, க. புனிதா, மு. கஸ்தூரி, மா.ஹேமா.

 

பொங்கிடும் அனைத்தும் மண்ணின் 

பொன்மணி விளைச்சல் தானே!- நிலம்,

தங்கிடும் உயிர்க ளெல்லாம்,

தந்ததும் உழைப்பைத் தானே!

 

வெந்திடும் பொங்கல் எல்லாம் ,

வெற்றியின் வியர்வை யாகும்- அதோ!

வந்திடும் பொங்கல் நாளை

வணங்குதல் நன்றி  யாகும்!

 

யந்திர வாழ்க்கை  யாகி ,

யாதுமாய் ஆகி  விட்ட- மக்கள்

வெந்திடும் உணவு அற்றால்,

வேதனை அடைவ  துண்மை!

 

நிலத்தையே நம்பி வாழும்,

நிலைதான் அற்றுப் போனால் – யந்திரம்

விளைச்சலைத் தருமா சொல்வீர்!

விதியென இருத்தல் மேலா?

 

நிலம்தரும்  பயிர்கள் இன்றி,

நிம்மதி வருவ தில்லை- -பயிர்,

வளர்ச்சிதான் உயிர்கென்  றாகும்!

வயற்றுக் குணாவாய் மாறும்!

 

பசித்தவன் நிறைத்துக் கொண்டால்

பட்டினி என்ப தில்லை!-   தினம் ,

புசித்திட நேர்ந்து விட்டால்,

புலர்வெலாம் பொங்க லாகும்!

 

மண்ணையே அன்னை என்பர்,

மகிழ்வுறக் போற்று வார்கள்!-  விண்ணையும்

மண்ணையும் நம்பித தானே!

வியத்தகு  உலகு ஓங்கும்!

 

உழுதிட விளைச்சல் காட்டும்

உன்னத பூமி போல- கற்கப் 

பழுதிலா தமிழைப் பெற்றால்,

தக்கதாய் பொங்கும் வாழ்க்கை!

 

 வீ.கா.அருண்மொழி

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here