கோவிட் உறுதி செய்யப்பட்ட ஊழியர்களை மறைக்காதீர்

மெர்சிங்: முழுத் திறனில் செயல்பட முடியவில்லையே என்ற அச்சத்தில் தங்கள் ஊழியர்களை மறைத்து வைத்திருப்பது கண்டறியப்பட்ட முதலாளிகள் உள்ளனர் என்று மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

நான் உற்பத்தி மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளேன். உறுதி செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளன. ஆனால் (முதலாளிகள்) அவர்கள் செயல்பட முடியாது என்ற அச்சத்தில் சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவிக்கவில்லை என்று அவர் நேற்று இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகளை வழங்கிய பின்னர் கூறினார்.

இதுபோன்ற செயல் முதலாளிகளின் மோசமான நடைமுறை என்று அவர் கூறினார். முன்னதாக, மெர்சிங் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 320 பேருக்கு Pembangunan Sumber Manusia Bhd,  தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனம், திறன் மேம்பாட்டு நிதியம் கார்ப் மற்றும் டேலண்ட் கார்ப்பரேஷன் மலேசியா சென்.பெர்ஹாட்  ஆகியவற்றிலிருந்து RM120,000 தொகையை சரவணன் வழங்கினார். – பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here