தமிழுக்கு மரியாதை தரும் பெற்றோர்களுக்கு முதல் மரியாதை

முனியாண்டி

மலேசிய இதியர்கள் சில விழுக்காட்டினர் இன்னும் அறியாமையில்  இருப்பது போலவே  தெரிந்தாலும் அவர்கள் அறியாமையில் இல்லை என்பது மட்டும் தெளிவு என்று மன நலம் சார்ந்த ஆயாவாளர்கள் கூறுகின்றனர்.

போதிய வசதியும் அருகில் பள்ளிகள் இல்லாமையும் ஒரு காரணம் என்பதும் அறியப்பட்டிருக்கிறது. இவற்றைக் களைய பல இயக்கங்கள்  இப்போது தயாராகவே இருக்கின்றன என்பதால் காரணங்கள் தேவையில்லை.

தமிழ் என்பது மொழி மட்டும் அல்ல . உலகளாவிய மொழிகளில் மிகச்சிறந்த மதிப்போடும் இலக்கண இலக்கியச் செறிவோடும் திகழும் மொழியாகவே இருக்கிறது என்பதைக் காட்டிலும் இசுலாமிய நாடுகளிலும் உயர்வகாப் பேசப்படுகிறது என்றால் அவர்கள் கற்காமல் கூறுகின்றனர் என்பதல்ல. கற்றுத் தெளிந்தே கூறுகின்றனர் என்றுதானே அர்த்தம்.

வேற்று மதத்தார், வேற்று இனத்தார்  தமிழை சிறந்த மொழி என்றெ கற்கிறார்கள். அதன் ஆளுமையைப் மதித்து போற்றுகின்றார்கள்.

இன்னும், சீனாவிலும், ஜப்பானினும், மேலை நாடுகளிலும் கூட தமிழ் வானொலி நிலையங்களை வெற்றிகரமாக நடத்துகிறார்கள் என்றால் தமிழின் தனித்துவம்  எத்தகையது என்று தெரியாமல் செய்வார்களா?

அவர்களைப் பற்றிப்பேசுகின்ற நாம் மலேசிய நாட்டில் தமிழ் மொழிக்குக் கொடுக்கும் மரியாதை என்ன என்பதையும் சிந்திக்கும் நேரம் இது என்று கூறுகிறார் பட்டர்வொர்த் பொது நலத்தொண்டர் மா. முனியாண்டி.

நம் இந்தியர்கள்  இன்னும் காரணங்களைச் சொல்லி தாய்மொழியைத் தவிர்த்து வருகின்றனர். தமிழனுக்குத் தாய்மொழி தமிழே தாய்மொழி. இதைத்தான் வள்ளுவன் முகத்திரண்டு கண்கள் என்கிறான்.

நாமே நம்மொழியைப் புறக்கணிக்கும் அறியாமை மாறவேண்டும் என்பது மொழியாளர்களின் எண்ணமாக இருக்கிறது. 

இன்றைய நிலையில் தமிழ்ப்பிள்ளைகள் கற்ற விரும்பும் மொழியை தாங்களே  முடிவெடுப்பதில்லை. பிள்ளைகளின் பெற்றோர்களே அனைத்திற்கும் காரணமாக இருக்கின்றனர். அவர்களின் எண்ணம் எதிர்கால நிலைமை கருதி உணரப்பட்டால், நாமே நம்மை அழித்துக்கொள்ளத் துணிய மாட்டோம்.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை. தூரம் பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல் தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புதலே  பண்புகளில் உயர்வானதாக இருக்க முடியும்.

தமிழனுக்கு இன உணர்வும். மொழிப்பற்றும் அதிகம். பிற மொழிகளைச் சகோதர மொழியாக எண்ணுவதிலும் முதன்மையானவன். அப்படிப்பட்டவன் சொந்த மொழியை சொதப்பிவிடலாமா? தாயை பழிக்க விடலாமா?

தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வைக்கின்ற தமிழ்ப் பெற்றொர்களுக்கு முதல் மரியாதை எப்போதும் உணடு.

நாம் மரியாதைக் குரியவர்கள் என்பதில் ஐயமில்லை. அதனால் ஆரம்ப கல்வியாக தமிழ்ப்பள்ளிகளைத் தேர்வு செய்யுங்கள் என்று வலியுறுத்துகிறார் முனியாண்டி. 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here