ஓடிடியில் வெளியாகும் அமீர்கானின் “சித்தாரே ஜமீன் பர்”

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான் . வர்த்தக ரீதியான திரைப்படங்கள் மட்டுமல்லாமல், பல புரட்சிகர கதைகளைத் தேர்ந்து நடித்ததால், மொழியைக் கடந்த ரசிகர்கள் இவருக்கு ஏராளம். இவரது நடிப்பில் கடந்த மாதம் ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற படம் வெளியானது. இதில், நடிகை ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, கூடைப்பந்து சொல்லி தரும் பயிற்சியாளராக அமீர்கான் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

தயாரிப்பாளரான அமீர் கான், ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தை எந்தவொரு முன்னணி ஓடிடி தளங்களிலும் வெளியிடாமல், யூடியூபில் கட்டணம் வசூலித்து அனைவரும் காணும் வகையில் வெளியிடுவோம் என அறிவித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேரடியாக யூடியூபில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது சோனி லைவ் ஓடிடிக்கு இப்படத்தை விற்பனை செய்ததாகவும் விரைவில் ஓடிடியில் வெளியாகும் அமீர்கான் பட நிறுவனம் தெரிவித்துள்ளது. யூடியூபில் போதிய வரவேற்பு இல்லாததாலேயே அமீர் கான் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here